shadow

என் பெயரை பயன்படுத்துவது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். இளங்கோவனுக்கு அன்புமணி எச்சரிக்கை
anbumani
பாமக நிறுவனர் ராமதாஸ் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையில் தனது பெயரை தேவையில்லாமல் இளங்கோவன் பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தனது பெயரை பயன்படுத்துவதை இத்துடன் அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்விவகாரத்தில் அன்புமணி பெயர் எப்படி வந்தது தெரியுமா?

சமீபத்தில் செய்யாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் விஷ்ணு பிரசாத் தோல்வி அடைந்தார். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவரை கட்சியில் இருந்து இளங்கோவன் நீக்கினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் மைத்துனன் தான் அன்புமணி என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இளங்கோவன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசின் மைத்துனர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் கருத்துகளை கூறியிருக்கிறார். அவதூறுகளை பரப்புகிற நோக்கத்தில் வெளிப்படையாக கருத்துகளை கூறியிருப்பதை கட்சி விரோத நடவடிக்கையாக கருதுகிறோம். எனவே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கையில் அன்புமணி பெயர் இடம்பெற வேண்டிய அவசியமே இல்லை. வேண்டுமென்ற இளங்கோவன், அன்புமணி பெயரை நுழைத்துள்ளதாக பாமக தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Leave a Reply