shadow

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே ‘கிங்’க்கெல்லாம் வேலை கிடையாது. அன்புமணி

Anbumani-Ramadoss-Vijayakanthகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம்தான் விஜயகாந்தின் தேமுதிக மாநாடு நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மிண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரு மாநாட்டிற்கு தயாராகி வருகிறது. அதுதான் பாமக வரும் 27ஆம் தேதி நடத்தவுள்ள மாநாடு.

இந்நிலையில் பாமகவின் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாக கவனித்து வரும் நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட அன்புமணி ராமதாஸ் நேற்று வண்டலூர் வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாமகவின் இந்த மாநாடு எந்த கட்சியும் இதுவரை நடத்தாத அளவு சிறப்பாக அமையும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். இந்த தேர்தலுக்கு இறுதி பிரச்சாரமாக இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

கடந்த பிப்ரவரி 15-ம் தேதி முதல்வர் வேட்பாளராக என்னை அறிவித்திருந்தார்கள். அன்றிலிருந்து எங்கள் வேலைகளை தொடங்கி இருக்கிறோம். திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை, அரியலூர், விழுப்புரம், சேலம் ஆகிய எட்டு மண்டலங்களிலும் மாநாடு நடத்தினோம். இறுதியாக மாநில மாநாடு வண்டலூரில் நடைபெற இருக்கின்றது.

விஜயகாந்த் எந்த பக்கம் வெயிட் அதிகமாக இருக்கின்றதோ அந்தபக்கம் சாய்வார். ரெண்டு பக்கமும் புடிச்சிகிட்டா சாயாம இருப்பார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கே ‘கிங்’க்கெல்லாம் வேலை கிடையாது. ஒருவேளை 200 ஆண்டிற்கு முந்தைய மனநிலையில் அவர் இருக்கின்றார்’ என்று விஜயகாந்தை ஒருபிடி பிடித்தார் அன்புமணி.

Leave a Reply