shadow

anbumani1திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை ஒழிப்பதற்காகவே நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என அன்புமணி ராமதாஸ் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அன்புமணியின் பேட்டியில் இருந்து சில பகுதிகள்:

நாங்கள் தனியாக இருந்தால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு சாதகமாகிவிடும். இரு கட்சிகளுக்கும் எதிரான வாக்குகள் சிதறி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் சாதகமான நிலை ஏற்பட்டுவிடும். அதற்காகத்தான் நாங்கள் இந்த இரு திராவிட கட்சிகளுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைத்துள்ளோம். எங்கள் குறிக்கோள் மக்களை சீரழிக்கும் இரு திராவிட கட்சிகளையும் ஒழிக்க வேண்டும்.

இந்த கூட்டணி காரணமாக மருத்துவர் அய்யாவுக்கு சில அதிருப்திகள் இருந்தாலும் தற்போது அவர் சமாதானமாகிவிட்டார். எங்கள் கூட்டணி கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்று 30 ஆண்டுகளுக்கு முன்னர் ராமசாமி படையாச்சியார் கூறியது. தற்போது எங்கள் கட்சி வன்னியர்களுக்காக மட்டும் பாடுபடவில்லை. தலித் போன்ற சமுதாய மக்களுக்கும் நாங்கள் நல்லது செய்வோம்.

கூட்டணி ஒன்றாக இருந்தாலும் பாஜகவின் கொள்கைகளும், எங்கள் கொள்கைகளும் வேறு வேறானது. கூட்டணிக்காக கொள்கைகளை விட்டுத்தர மாட்டோம். தேவைப்பட்டால் கடுமை காட்டுவோம்.

அதிமுக பணத்தை மட்டுமே நம்பி தனியாக தேர்தலில் களம் காணுகிறது. திமுகவுடன் கூட்டணி சேர யாரும் விரும்பாததால் தனித்து நிற்கிறது. இந்த இரு கட்சிகளையும் வீழ்த்த எங்களுக்கு கிடைத்த சரியான சந்தர்ப்பம் இந்த தேர்தல்.

Leave a Reply