திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக பொதுச்செயலாளர் வயது மூப்பு காரணமாக உடல் நலம் இன்றி கடந்த சில நாட்களாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் அன்பழகன் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அன்பழகன் உடல்நிலை இவ்வாறு இருக்கும் நிலையில் தனது பிறந்த நாளை இந்த ஆண்டு கொண்டாடப் போவதில்லை என்றும் எனவே தனக்கு வாழ்த்து சொல்ல தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என்றும் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply