shadow

முதல் படத்தில் ‘ராணி’, 2வது படத்தில் பாலியல் தொழிலாளியா?

anaikaஇயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘காவியத்தலைவன். சித்தார்த், வேதிகா நடித்திருந்த இந்த படத்தில் ராணி ரங்கம்மா வேடத்தில் நடித்தவர் புதுமுகம் அனைகா சோட்டி. இவர் தற்போது ‘அதர்வாவின் ‘செம போதை ஆகாதே’ படத்தில் ஒரு முக்கிய கேரகரில் நடித்து வருகிறார்.

இந்த படம் அவருடைய இரண்டாவது படமாக அமைந்திருக்கும் நிலையில் இந்த படத்தில் அனைகா, பாலியல் தொழிலாளி வேடத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சியுடன் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மேலும் அதர்வா, அனைகா ஆடும் குத்துப்பாடல் ஒன்றும் இந்த படத்தின் ஹைலைட் என்று கூறப்படுகிறது. ‘குஷி’ படத்தில் இடம்பெற்ற ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ டைப்பில் செம போதையாக இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளதாம்.

அதர்வா இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தயாரிக்கவும் செய்துள்ளார். பத்ரி நாராயணன் இயக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

Leave a Reply