ஜெயலலிதா மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்: புகழேந்தி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும்; அப்போலோ நிர்வாகம் எதை மறைக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டும் என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பழனிசாமியுடன் நானும் இருந்தேன்; நடந்தவை அனைத்தும் பழனிசாமிக்கு நன்றாகவே தெரியும் என புகழேந்தி கூறியுள்ளார்.