shadow

AMWAYஅமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் நுகர்வோர் பயன்பாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆம்வே நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதனால் ஆம்வே நிறுவன வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தவறான வர்த்தக தொடர்புகளுடன் பரிசுத்தொகை சீட்டு மற்றும் பணவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆம்வே நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான வில்லியம் எஸ் பிங்க்னியை இன்று ஆந்திர மாநில காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வில்லியம்ஸ் கர்நூல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தபடுகிறார். ஏற்கனவே இதே முறைகேடு தொடர்பாக கேரள காவல்துறையினர்களும் இவரை இதற்கு முன்பு கைது செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply