பிக்பாஸ் சீசன் 6: 13 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றது யார்?

பிக்பாஸ் சீசன் 6: 13 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சென்றது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பணமூட்டை அறிமுகம் செய்யப்பட்டது

அப்போது அதிலிருந்த மூன்று லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு கதிரவன் வெளியேறினார்

இந்த நிலையில் தற்போது மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணப்பெட்டியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் ரூபாய் 13 லட்சம் வந்த பிறகு அமுதமாணன் எடுத்துக்கொண்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது ஷிவின், விக்ரமன் அஷிம் மற்றும் மைனா ஆகிய நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது