தினகரன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது: திடுக்கிடும் தகவல்

தினகரன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாது: திடுக்கிடும் தகவல்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள தினகரன், அக்கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அக்கட்சிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது

அமமுகவில் பதிவு செய்ய விண்ணப்பத்துடன் அளித்த பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்ட 14 பேர் தற்போது அக்கட்சியில் இல்லை. எனவே கையெழுத்திட்டவர்கள் கட்சியில் இருந்து விலகி விட்டதால், அந்த பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் கட்சியை பதிவு செய்யக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என புகழேந்தி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் புகழேந்தி தாக்கல் செய்த இந்த மனுவால் தினகரனின் அமமுக கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது

Leave a Reply