அமித்ஷாவின் உடல்நிலை குறித்து அதிர்ச்சித் தகவல்

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருவதை அடுத்து அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்

தனது உடல் நிலைக்கு ஒன்றும் இல்லை என்றும் தான் நன்றாக இருப்பதாகவும் தனது உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

மேலும் தான் முழு உடல் தகுதியுடன் தனது பணியை சிறப்பாக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நாடு முதன்முறையாக கொரோனா போன்ற உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது என்றும், நாட்டின் உள்துறை அமைச்சராக எனது பணி இரவு வரை பிஸியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply