shadow

amitabh-rajini-020412

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க மில்லியன்கணக்கான டாலர்கள் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் செலவு செய்து கவலையுடன் தேடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அமிதாப், மலேசிய விமானம் குறித்து கேலி செய்யும் வகையில் டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த கருத்தில் அவர் ரஜினியை பற்றி குறிப்பிட்டுள்ளதால் ரஜினி ரசிகர்களும் அமிதாப்பின் டுவிட்டர் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

71 வயதாகும் அமிதாப் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரையும் தெரிந்ததே. இந்நிலையில் அமிதாப் சமீபத்தில் டுவிட்டரில் காணாமல் போன மலேசிய விமானத்தை ரஜினி கண்டுபிடிக்க உள்ளதாக குறிப்பிடும் வகையில் நகைச்சுவையாக ” “Rajnikanth … enough is enough !! You win OK !! Now tell us where that plane is.” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலானோர் இதை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு அமிதாப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரஜினி ரசிகர்களும் அமிதாப்புக்கு தங்கள் கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். அமிதாப் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அமிதாப் இதுகுறித்து எவ்வித பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Leave a Reply