அஜித் படத்தை தயாரிக்கவில்லை. அமிதாப்

அஜித் படத்தை தயாரிக்கவில்லை. அமிதாப்

கடந்த சில நாட்களாக கோலிவுட் திரையுலகில் அஜித்தின் 58வது படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தை அமிதாப் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இது வெறும் வதந்தி என்றும் அஜித் படத்தை அமிதாப் தயாரிக்க எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் அவரது தரப்பினர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அமிதாப் தயாரிக்கவில்லை என்பது உறுதியானாலும் அஜித்-அட்லி இணைவது கிட்டத்தட்ட சாத்தியம்தான் என்றும் இந்த படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த ‘அசல்’ படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் நடிக்கவுள்ள 57வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். சிறுத்தை சிவா இயக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ள இந்த படத்தில் அஜித், நாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இணையும் அஜித்-அமிதாப்

Leave a Reply