shadow

அமிதாப்பச்சன், கங்கனா ரனாவத் ஆகியோர்களுக்கு தேசிய விருது.
amitab
இந்திய திரையுலக நட்சத்திரங்களுக்கான மிகப்பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருதுகள் சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. 63வது வருடமாக அறிவிக்கப்பட்டும் இந்த தேசிய விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் பெற்றுள்ளார். தீபிகா படுகோனேவுடன் அமிதாப் நடித்த ‘பிக்கு’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருதினை அவர் பெறுகிறார். இது அமிதாப்பச்சன் பெறும் நான்காவது தேசிய விருது ஆகும். ஏற்கனவே அக்னிபத், பிளாக் மற்றும் ‘பா’ ஆகிய படங்களுக்காக மூன்று முறை தேசிய விருதை அமிதாப் பெற்றுள்ளார்.

அதேபோல் ஏற்கனவே  ஃபேஷன், க்வீன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளை பெற்ற பிரபல நடிகை கங்கனா ரனாவத், ‘தானு வெட்ஸ் மானு 2’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மீண்டும் இந்த ஆண்டு தேசிய விருதை பெறுகிறார்.

அனைவரும் எதிர்பார்த்த எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது கிடைத்துள்ளார். சிறந்த இயக்குனருக்கான விருது ‘பாஜ்ராங்கி மஸ்தானி’ படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பஞ்சாலி பெறுகிறார்.

Leave a Reply