shadow

amit shah 1பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அமித் ஷா முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்லி  ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எவ்வித எதிர்ப்புகளும் இன்றி அமித் ஷா கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு செய்யப்பட்ட அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  

இதுநாள்வரை கட்சியின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், அமித் ஷாவிடம் முறைப்படி பொறுப்புகளை இன்று ஒப்படைத்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “பாரதிய ஜனதா கட்சி உத்தரப்பிரதேசத்தில்  மாபெரும் வெற்றி பெற அமித்ஷாவே முக்கியக் காரணம் என்று கூறினார். மேலும் தனது தலைமையில் பாரதிய ஜனதா கட்சி இருந்தபோது நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்ததில் பெருமை கொள்வதாக கூறினார்.

Leave a Reply