shadow

இந்தியா செல்லும் சீனர்களுக்கு சீன வெளியுறவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என சீனர்களுக்கு அந்நாடு எச்சரிக்கை செய்ததாக சீன பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இந்திய , சீன எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா, பூடான் எல்லையில் உள்ள டோக்லாம் பீடபூமியை சீனா, பூடான் இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த பீடபூமி வழியாக இந்தியாவுக்கு சொந்தமான சிக்கிம் மாநிலம் வரை சாலை அமைப்பது சீனாவின் திட்டம். இந்தத் திட்டத்திற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இங்கு சாலை அமைக்க அனுமதித்தால், வடகிழக்கு மாநிலங்களுக்குள் எளிதாக சீனா நுழைந்து விடும் என்பதுதான் இந்தியாவின் எண்ணம்

எனவே டோக்லாம் பீடபூமி விஷயத்தில் பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது. இதனை கண்டித்து வரும் சீனா, இந்திய எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த இந்திய ராணுவ பதுங்கு குழிகளை சமீபத்தில் அழித்தது. இதனால், எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது. சிக்கிம் விஷயத்திலும் இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் சீன செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதையடுத்து, சீனர்களுக்கு அந்த நாடு விடுத்துள்ள எச்சரிக்கையில், பாதுகாப்பு, சட்ட விதிகள், வெளிநாட்டு வாழ் சீனர்களின் விருப்பங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளது. இதை அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

Leave a Reply