இந்திய பெண் தூதர் தேவயானி கோப்ரகடேவின் ஆடை களைந்து சோதனையிட்டதாக சமூக இணையதளங்களில் வெளிவந்துள்ள வீடியோ போலியானது என அமெரிக்க வெளியுறவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இந்தியதூதரக பெண் அதிகாரி தேவயானி விசா மோசடி காரணமாகவும், தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்காத குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் அமெரிக்க காவல்நிலையத்தில் ஆடை களையப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

தற்போது சமூக இணையதளங்களில் தேவயானி கதற கதற ஆண் காவல்துறை அதிகாரிகளால் ஆடை களையப்பட்டு சோதனை செய்யப்படுவது போன்ற ஒரு வீடியோ காட்சி மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று விளக்கம் அளித்துள்ளது. இந்த வீடியோ போலியானது என்றும், ஆடை களையப்பட்டு சோதனை செய்வது அமெரிக்க போலீஸாரின் வழக்கமான நடைமுறை என்றாலும் அவை யாவும் தேவயானிக்கு பெண் போலீஸாரால்தான் செய்யப்பட்டது என்றும் அதற்கு அவரும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தார் என்றும் அந்த காட்சியை போலீஸார் வீடியோ எதுவும் எடுக்கவில்லை என்றும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளியான வீடியோ யாரோ விஷமிகள் மார்பிங் செய்து வெளியிட்ட போலி வீடியோ என்றும் இந்த வீடியோவை இந்திய அரசும் மற்றவர்களும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply