அமெரிக்கா மற்றும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் 19 பேர் தமிழகத்தில் பொங்கல் விழாக்களை தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து கொண்டாடினர்.

சிதம்பரம் அருகே உள்ள புத்தூர் நெடுஞ்சேரி என்ற கிராமத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த 19 பேர் தங்கி தமிழக கலை மற்றும் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் பொங்கல் விழாவை அந்த கிராம மக்களுடன் சேர்ந்து கொண்டாட விருப்பம் தெரிவித்தனர். அதை மிக சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அவர்களுக்கு வேட்டி, சேலை போன்ற பாரம்பரிய தமிழர்களின் உடைகள் வழங்கி பொங்கலிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மேலும் அவர்களுக்கு சிலம்பம், காவடி, கரகம், கோலாட்டம், கும்மி போன்ற நிகழ்ச்சிகள் நடத்திக்காட்டி ஆடிப்பாடி மகிழ்ச்சிபடுத்தினர். இதையடுத்து 19 பேர்களும் சைக்கிளில் கிராமம் கிராமாகசென்று தமிழக விவாசயம் குறித்தும், சாகுபடி, அறுவடை குறித்தும் கிராம மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். தமிழக மக்களின் கிராமிய கலை, கலாச்சாரம், மொழிப்பற்று போன்றவற்றை அவர்களுடன் கலந்துரையாடி அறிந்தனர்.

வெளிநாட்டினருக்கு தகுந்த மரியாதை செய்த கிராம மக்கள்,அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்தனர்.

Leave a Reply