அமெரிக்காவின் பிரபல பாடகர் சுட்டு கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவின் பிரபல பாடகர் சுட்டு கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான 20 வயதே ஆன டுவெய்ன் ஆன்ஃபிராய் என்பவர் நேற்று சுட்டு கொல்லப்பட்டார். இவர் அமெரிக்காவில் உள்ள பிளோரிடா என்ற பகுதியை சேர்ந்தவர். எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படும் இவரது மரணத்தால் இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டுவெய்ன் ஆன்ஃபிராய் நேற்று பிளோரிடாவில் உள்ள டீர்பீல்ட் கடற்கரையில் உள்ள ஒரு இருசக்கர வாகன கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டால் படுகாயமடைந்த டுவெய்ன் ஆன்ஃபிராய் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் சிகிச்சையின் அவர் உரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.