காப்புரிமை கொடுத்தால் ஒன்றரை கோடி பரிசு: அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு

ரோபோக்களுக்கு முக காப்புரிமை கொடுத்தால் ரூபாய் ஒன்றரை கோடி பரிசு என அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த புரோமோபோட் என்ற நிறுவனம் ரோபோ தயாரித்து வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முக மாதிரியை பயன்படுத்த அனுமதிக்கும் நபர்களுக்கு காப்புரிமையாக ஒன்றரை ரூபாய் கோடி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது

இந்த அறிவிப்பை அடுத்து பலர் ரோபோக்களுக்கு முக மாதிரியை பயன்படுத்த காப்புரிமை கொடுக்க முன்வருவதாக கூறப்படுகிறது.