அமெரிக்காவில் வுயோமிங் பகுதியில் கேம்பல் ஹில் என்ற இடத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு 176 ராட்சத காற்றாடிகள் நிறுவப்பட்டுள்ளன.

இதன் காற்றாடியில் சிக்கி புறாக்கள்,கிளிகள், கழுகுகள்,சிட்டு குருவிகள், ஆந்தைகள், மற்றும் கருப்பு நிற குருவிகள் என பல அரியவகை பறவைகள் பலியாகின. எனவே, இந்த காற்றாலை மீது நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க மின் அமைப்பிடம் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய அமைப்பு சம்மந்தப்பட்ட காற்றாலை நிறுவனத்துக்கு ரூ.6 கோடிரூபாய் அபராதம் விதித்தது.

Leave a Reply