இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்கா அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்தியாவில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது,

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா சென்றால் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இதனால் இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த பலர் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply