அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் மெட்ரோ ரயில் தடம் புரண்டதில், அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க் அருகே ஸ்புய்டென் டியுவில் ரயில் நிலையம் அருகே பிரோன்ஸ் பகுதியில் வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.20 மணியளவில் திடீரென தடம் புரண்டது.

ஹட்சன் நதியோரம் ஒரு வளைவு பகுதியில் வந்து கொண்டிருந்த போது ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 67 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply