அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சி: அதிரடி நடவடிக்கை

அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்த இந்து மக்கள் கட்சி: அதிரடி நடவடிக்கை

கும்பகோணம் பகுதியில் அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்து போஸ்டர் ஒட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் கும்பகோணத்தில் அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து விபூதி பொட்டு அணிந்த போஸ்டரை ஒட்டி இருந்தார்.

இதனையடுத்து இந்த போஸ்டர் போலீஸ் அதிகாரிகளால் அகற்றப்பட்டது. அதன் பின்னர் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த குரு மூர்த்தி என்பவரை போலீசார் கைது செய்தனர்

அம்பேத்கருக்கு காவி உடை நெற்றியில் விபூதி பட்டை என ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.