வங்கக்கடலில் அம்பான் புயல்:

தமிழகத்தை பாதிக்குமா?

வங்க கடலில் ஏற்படும் அம்பான் புயல் தமிழகத்தை பாதிக்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக்கடலில் அடுத்த 5 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படுவதன் காரணமாக வங்கக்கடலில் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும்

இந்த புயல் காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் ஒருசில தென் மாவட்டங்களில் மட்டுமே கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் தென்மேற்கு பருவமழை இன்று அந்தமானில் துவங்குவதன் காரணமாகவே வங்கக்கடலில் தெற்கு மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி புயலாக மாறி விட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Leave a Reply