shadow

இன்னொரு காதல், கல்யாணம் கட்டாயம் உண்டு. அமலாபால்

பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால் அதே வேகத்தில் கருத்துவேறுபாட்டு ஏற்பட்டு விவாகரத்தும் செய்து கொண்டார். தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அமலாபாலுக்கு கைவசம் மூன்று படங்கள் இருக்கின்றது என்பதும் இன்னும் இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்யுடனான பிரிவு துரதிர்ஷ்டவசமானது என்பதை ஒப்புக்கொள்ளும் அமலாபால் அதற்காக சன்னியாசம் பெற்று இமயமலைக்கு செல்லபோவதில்லை என்றும் தன்னுடைய வாழ்வில் மீண்டும் ஒரு காதல் மற்றும் கல்யாணம் கட்டாயம் உண்டு என்றும் நேரம் வரும்போது அதை அனைவருக்கும் தெரிவிக்கவிருப்பதாகவும் அமலாபால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் ‘விஐபி 2’ படம் குறித்து கூறியபோது இயக்குனர் செளந்தர்யா தனது கேரக்டரை இன்னும் மெருகேற்றியுள்ளதாகவும், ஒரு பெண் இயக்குனர் என்பதால் நினைத்ததை பேசவும் பலவிஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் வசதியாக இருந்ததாகவும் அமலாபால் கூறினார்.

Leave a Reply