ஸ்ரீதேவி இடத்தை பிடிப்பாரா அமலாபால்?
இந்தி திரையுலகில் இருந்து கோலிவுட் திரையுலகிற்கு வந்த பலர் வெற்றி பெற்று வரும் நிலையில் ஸ்ரீதேவியை அடுத்து இன்னும் பாலிவுட் திரையுலகில் நடிகைகள் யாரும் வெற்றி பெறவில்லை
இந்த நிலையில் தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படம் வெற்றி பெற்றால் அமலாபால், இன்னும் ஒருசில வருடங்களில் ஸ்ரீதேவியை போல் பாலிவுட்டில் புகழ் பெறுவார் என்று கூறப்படுகிறது.
அமலாபால் நடிக்கும் முதல் பாலிவுட் படத்தில் அர்ஜுன் ராம்பால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை நரேஷ் மல்ஹோத்ரா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
அமலாபால் தற்போது தமிழில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘ராட்ச்சசன்’ என்ற் படத்திலும் ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.