shadow

ajith and harris

மின்னலே படத்தில் இருந்து இயக்குனர் கவுதம் மேனனின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த ஹாரிஸ் ஜெயராஜ், வாரணம் ஆயிரம் படத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன் பின்னர் கவுதம் மேனனின் படங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா இசையமைத்தனர்.

தற்போது அஜீத் நடிக்கும் படத்தில் மீண்டும் கவுதம் மேனன் -ஹாரீஸ் ஜெயராஜ் ஒன்று சேர்வார்கள் என்று சொல்லப்பட்டது. இருவரும் தனிமையில் நீண்ட நேரம் பேசி, தங்கள் கருத்துவேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்தனர். இதனால் அஜீத் படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ இசையமைப்பார் என்று கூறப்பட்டது. இதனிடையே இன்று கவுதம் மேனனை அழைத்து பேசிய ஏ.எம்.ரத்னம், ஹாரீஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டாம் என்றும் வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யவும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஏ.எம்.ரத்னம் இதற்கு முன்னர் தயாரித்த பீமா படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ்தான் இசையமைத்தார். அந்த படத்திற்கு பின்னணி இசையமைக்க ஹாரீஸ் அதிக காலம் எடுத்துக்கொண்டதுடன், பேசிய சம்பளத்தை காட்டிலும், அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஹாரீஸ் ஜெயராஜை ஏ.எம்.ரத்னம் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

எனவே தற்போது அஜித் படத்திற்கு இசையமைக்க மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

Leave a Reply