shadow

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை டுவிட்டரில் சிலர் பதிவு செய்துள்ளனர்

அல்லு அர்ஜுன் வித்தியாசமான நடிப்பு தவிர இந்த படத்தில் எதுவுமே இல்லை என்றும் பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை சுமாராக இருப்பதாகவும் காமெடி காட்சிகள் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்கள்

மேலும் திரைக்கதையில் எந்தவிதமான புதுமையும் இல்லை என்றும் கிளைமாக்ஸ் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்

பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா ஆகிய இருவருக்குமே அழுத்தமான கேரக்டர் இல்லை என்றும் கிளைமாக்ஸ் படு மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்திற்கா இவ்வளவு பில்டப் என்று தான் பலர் விமர்சனம் செய்துள்ளனர்.