விமானப்பயணத்தின் போது கதிர்வீச்சு காரணமாக மொபைல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்த அனைத்து நாடுகளும் தடை செய்திருக்கும் நிலையில் பிலிப்பைன்ஸ் நாடு, விமானம் சில குறிப்பிட்ட உயரத்தில் பறந்தபிறகு பயணிகளை மொபைல் போன்கள் போன்ற எலக்ட்ரானிக பொருட்களை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள காப்(Civil Aviation Authority of the Philippines) இயக்குனர் விலியம் ஹொட்ச்கிஸ்ஸ், விமான கிளம்பிய சிறிது நேரம் கழித்து, பயணிகள் தங்கள் மொபைல் போன், லேப்டாப், எம்பி3 மியுசிக் சிஸ்டம் போன்ற கருவிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். மேலும் விமானத்தில் இணைய தொடர்புக்கும் வழிவகை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த விமான பயணி ஒருவர் ‘நீண்ட தூரம் விமான பயணத்தின்போது பயணிகள் அனைவரும் தூக்கம் மற்றும் திரைப்படம் பார்ப்பதிலேயே பொழுதை கழிப்பார்கள். இனி அந்த கவலையின்றி இணையத்தில் பயனுள்ள வகையில் பயணிகள் பொழுதை கழிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply