அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு: இந்த வருஷமும் போச்சா?

அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன

அதேபோல் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் தேர்வுக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் விடுமுறைக்கு பின்னரும் எந்த கல்லூரியும் திறக்கக்கூடாது என்றும் மீறி கல்லூரி திறந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சரின் ஆலோசனையின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழக தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து 2020, 2021 போலவே இந்த ஆண்டும் தேர்வுகள் ரத்தாகும் என தெரிகிறது.