ஜூலை 1 முதல் இந்த பொருட்களுக்கெல்லாம் தடை.. மத்திய அரசு

சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு முக்கியமான காரணமாக இருக்கும் சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1, 2022 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து மீண்டும் எச்சரித்துள்ளது.

பிளாஸ்டிக் பைகள் தவிர, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்டிரா, ஸ்பூன், ரேப்பர், காட்டன் பட்ஸ் போன்றவை இந்த தடையில் அடங்கும்.

ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வரும் உத்தரவுக்கு முன்னதாக, மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.