8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸ்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு

8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் பாஸ்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் அதன்பின்னர் முழு ஆண்டு தேர்வு நடத்துவது எப்படி? என்பது குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநில முதல்வரும் உறுதி செய்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

Leave a Reply