ஜனவரி 31ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் ஜனவரி 31ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 31 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதால் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் 20ஆம் தேதி முதல் நடைபெற செமஸ்டர் இருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.