62 கர்ப்பிணிகள் தனிமைப்படுத்தியதால் பரபரப்பு

புனே பகுதியில் உள்ள 62 கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கு திடீரென கொரோனா பாசிட்டிவ் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை செய்த 62 கர்ப்பிணி பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இருப்பினும் 62 கர்ப்பிணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது குறித்த எந்தவித அறிகுறியும் இல்லை என்றும், இருப்பினும் அவர்கள் 28 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை இந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்ற இந்த 62 பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அனைவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருப்பதாகவும் 62 கர்ப்பிணி பெண்களுக்கும் பிரசவம் ஏற்படும் வரை அவர்களை சிறப்பு கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *