சென்னையின் அனைத்து 22 சுரங்கப்பாதைகளும் போக்குவரத்துக்கு தயார்: மாநகராட்சி அறிவிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பெய்த கனமழை காரணமாக 22 சுரங்கப் பாதையிலும் மழைநீர் தேங்கி இருந்ததூ.

இந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தற்போது வெள்ள நீரால் மூழ்கிய 22 சுரங்கப் பாதைகளும் சரி செய்யப்பட்டதாகவும் அனைத்து சுரங்கப் பாதையிலும் தற்போது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.