அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எத்தனை காளையர்? காளைகள்?

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கிய நிலையில் இதில் 700 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்க தயாராக உள்ளனர்

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சிறந்த காளைக்கு முதல்வர் முக ஸ்டாலின் சார்பில் ஒரு சொகுசு கார் பரிசு அளிக்கப்படும்

சிறந்த மாடுபிடி வீரருக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ஒரு கார் பரிசு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் தங்ககாசு பரிசாக வழங்கப்பட உள்ளது