வரும் தீபாவளிக்கு ஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு என மூன்று படங்கள் வெளியாகின்றன. அதில் அழகுராஜாவுக்கே இதுவரை அதிக திரையரங்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 275 திரையரங்குகள்.

தமிழ்நாட்டில் ரிலீஸ் படங்களை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை 700க்கும் கீழ்தான் உள்ளது. அதில் ஓரளவு நல்ல திரையரங்குகள் என்று கணக்கெடுத்தால் எண்ணிக்கை மேலும் கணிசமாக குறையும். இதுதான் இன்றைய தமிழக நிலைமை.

இந்த குறைவான திரையரங்குகள் காரணமாக இரண்டு பெரிய படங்கள் வெளியானாலே திரையரங்குகளுக்கு இழுபறியாகிவிடும். ஞானவேல்ராஜா தொடர்ந்து படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வருவதால் திரையரங்குகள் அவரின் படத்துக்கு முக்கியம் தருவதில் வியப்பில்லை.

Leave a Reply