கென்யாவின் நைரோபி நகரில் வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலில் செப்டம்பர் 21ம் தேதி பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் அங்கிருந்த பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்தியர்கள் உள்பட 75 வெளிநாட்டினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஷாப்பிங் மாலில் பலரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். பின்னர் இஸ்ரேல் தலைமையிலான கென்ய ராணுவ படையினர் 5 நாட்கள் துப்பாக்கி சண்டை நடத்தி தீவிரவாதிகளை விரட்டினர். மேலும், 5 தீவிரவாதிகளை உயிருடன் பிடித்தனர்.

இந்த தாக்குதலுக்கு அல் கய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அதன் இளைஞர் படை என அழைக்கப்படும் அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கிடையில்,  அமெரிக்க உளவுப் படை தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போது அல் ஷபாப் தலைவர் சோமாலியாவில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான பாராவேயில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது.

அமெரிக்க எப்பிஐ படையினர், பாகிஸ்தானில் நுழைந்து பாராவே நகரை சுற்றிவளைத்தது. பின்னர் அல் ஷபாப் தலைவர் பதுங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்து அவரை சுட்டுக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோமாலியா அரசுக்கு இம்முறை தகவல் தெரிவித்துவிட்டே தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மற்றொரு அதிரடி தாக்குதலில், அல் கய்தா உயர்மட்ட தளபதி அல் லிபியை லிபியாவில் உள்ள திரிபோலி நகரில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

Leave a Reply