shadow

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரொமான்ஸ் படத்தில் நடிக்கிறாரா அஜித்? பரபரப்பு தகவல்

அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் ஏகே 62 என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் படம் என்றும் 40 வயதான ஹீரோ ஒருவருக்கு ஏற்படும் காதல் தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாராய் என்று கூறப்படும் நிலையில் அஜித் ஐஸ்வர்யா இடையே ஏற்படும் காதல்தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.