சினிமாவில் நடிகராவதற்கு முன், பைக் ரேஸ் வீரராக இருந்தவர் அஜீத். அதனால், நடிகரான பின்னும், அவ்வப்போது பைக் ரேசிலும் கலந்து கொண்டு வந்த அவர், சமீபகாலமாக பைக்கில் விழிப்புணர்வு பயணமும் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், வீரம் படப்பிடிப்புக்காக, மும்பையில் இருந்தபோது, அங்கிருந்து புனேவுக்கு பயணம் செய்து, அங்கிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்துள்ளார்.ஹெல்மெட் அணிவதின் அவசியம், சாலை விதிமுறைகளை மீறாமல் பைக் ஓட்டுவது போன்ற விழிப்புணர்வுக்காக, இந்த பைக் பயணத்தை மேற்கொண்ட அஜீத், 1,300 கி.மீ., தூரத்தை, 19 மணி நேரத்தில் கடந்துள்ளார்.

Leave a Reply