shadow

CTN ajith birth day‘தல’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அஜீத் இன்று தனது 43 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு சென்னை டுடே நியூஸ் இணையதளம் சார்பில் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கொள்கிறோம்.

அஜீத்தின் 43வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அஜீத் இன்று சொந்த வேலை காரணமாக புனேவில் இருப்பதாகவும், அவர் தன் பிறந்தநாளை இன்று சென்னையில் குடும்பத்துடன் கொண்டாடவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் வரும் திங்கட்கிழமை சென்னை திரும்புகிறார் என்றும் அதன்பின்னர் கவுதம் மேனனின் அஜீத் 55 படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் என்றும் அவரது மேனேஜர் தெரிவித்துள்ளார்.

1971ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் செகந்திராபாத் நகரத்தில் பிறந்த அஜீத், படிப்படியாக கஷ்டப்பட்டு முன்னேறி இன்று தமிழின் முன்னணி நடிகராக வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஒளிவு மறைவில்லாமல் பேசும் தன்மைதான் இவருடைய பலமும் பலவீனமும். அமர்க்களம் படத்தில் உடன் நடித்த நடிகை ஷாலினியை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகள் உண்டு.

இன்று அஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயா டிவியில் அஜீத் நடித்த ஆரம்பம் திரைப்படமும், சன் டிவியில் வீரம் திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. தல அஜீத்துக்கு மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

8i 8g 8f 8e 8a

Leave a Reply