shadow

தல அஜித் அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அஜீத் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:

பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போது, என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ, அல்லது ஏகே என்று குறிப்பிட்டால் போதுமானது.

’தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மனநிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்’ என்று அஜீத் தெரிவித்துள்ளார்.