shadow

பேய்ப்படத்திற்கு அஜீத் படத்தின் பாடல் தலைப்பு

unakennaகடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸான அஜீத்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த படத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தாமரை எழுதிய அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்று தொடங்கும் மெலடி பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் இந்தபாடலின் முதல் வரியில் ஒரு திரைப்படம் உருவாகிறது.

இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி வரும் படத்திற்கு முதலில் ‘டெய்சி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த படத்தின் கதையின் தன்மைக்கு  ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’ என்று தலைப்பு மிகப்பொருத்தமாக இருக்கும் என படக்குழுவினர் கருதியதால், தற்போது இந்த படத்தின் தலைப்பை மாற்றியுள்ளனர்.

இந்த படம் குறித்து இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் கூறியதாவது: “இந்த படத்தின் கதை அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையாக இருந்தாலும், மூல கருத்து ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் கதைதான். எந்த உறவிலும் உறுதிமொழி முக்கியமானது. மற்ற உறவுகளைவிட தந்தை மகளுக்குள் இருக்கும் உறவும், அதன் வாயிலாக கொடுக்கப்படும் உறுதிமொழியும் காலத்தை தாண்டி நீடிக்கும்.

அப்பேற்பட்ட ஒரு தந்தை, கருவில் இருக்கும் தன் சிசுவிடம் கொடுக்கும் உறுதிமொழி, அதைக்காப்பாற்ற முடியாமல் அவர் திசைமாறும் சூழ்நிலை, காப்பாற்ற படாத உறுதிமொழியின் காரணமாக உயிரிழக்கும் அந்தக் குழந்தை பின்னர் ஆவியாகி தன்னுடைய நிலைமைக்கு பழி வாங்கும் சூழ்நிலை என்று தட தடக்கும் திரைக்கதை மூலம் ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி’.

இந்த வகை படங்கள் பொதுவாக நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் இந்தப் படம் சில பல நிஜ சம்பவங்களின் கோர்வையாகும். அயுரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை உலகெங்கும் திரையிட உள்ளனர். ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ள இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை’’

இவ்வாறு  இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம் கூறினார்.

Leave a Reply