இதையெல்லாம் கண்டுக்காதீங்க: அடுத்த படம் பண்றோம். அஜித்தின் ஆறுதல் வார்த்தையால் நெகிழ்ந்த சிவா

இதையெல்லாம் கண்டுக்காதீங்க: அடுத்த படம் பண்றோம். அஜித்தின் ஆறுதல் வார்த்தையால் நெகிழ்ந்த சிவா

தல அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தை அஜித்தை பிடிக்காதவர்கள் கழுவி கழுவி ஊற்றுவதால் அந்த படத்தை உருவாக்கியவர் என்ற முறையில் இயக்குனர் சிவா மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் சிவாவை தனது வீட்டிற்கு அழைத்த அஜித், ‘இதெல்லாம் என் மீதுள்ள கோபத்தின் காரணமாக கிளம்பும் விமர்சனங்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த பட வேலையை ஆரம்பியுங்கள். நாம் மறுபடியும் ஹிட் கொடுக்குறோம்’ என்று கூறினாராம்

அஜித்தின் இந்த ஆறுதல் வார்த்தையால் மனம் நெகிழ்ந்த சிவா, உடனே உற்சாகமாகி அடுத்த படத்தின் கதையோட வர்றேன்’ என்று கூறிவிட்டு சென்றாராம். எனவே மிக விரைவில் புதிய படம் குறித்த அறிவிப்பை சிவா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply