அஜித் திடீரென சென்னை திரும்பியது ஏன்? புதிய தகவல்கள்

அஜித் திடீரென சென்னை திரும்பியது ஏன்? புதிய தகவல்கள்

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பல்கேரியா நாட்டில் ‘தல 57’ படப்பிடிப்பில் இருந்த தல அஜித் இன்று திடீரென சென்னை திரும்பினார். இதுகுறித்து படக்குழுவினர்களிடம் விசாரித்தபோது, பல்கேரிய படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், கிறிஸ்துமஸ் விடுமுறையை குடும்பத்தினர்களுடன் கொண்டாட அஜித் உடனே சென்னை திரும்பியதாகவும் கூறினர்.

அஜித் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் இண்டர்போல் அதிகாரியாக நடித்துள்ள ‘தல 57’ படத்தில் காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply