வீரம் படத்தை அடுத்து கவுதம் மேனனின் படத்தில் நடிக்கிறார் அஜீத். இந்த படம் அஜீத்துக்கு 55வது படம். இந்த படத்தில் அனுஷ்கா, அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கிறார். பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படத்தை முடிக்க அஜீத் மற்றும் கவுதம் மேனன் முடிவு செய்துள்ளனர்.

இந்த படத்தை அடுத்து அஜீத், ஆறுமாத காலம் ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளாராம். ஆரம்பம் படத்தின்போது ஏற்பட்ட விபத்துக்கு அறுவை சிகிச்சை செய்யவே இந்த ஓய்வு என்று கூறப்படுகிறது. அடுத்த படத்தை 2015 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர்தான் தொடங்க திட்டமிட்டு உள்ளாராம் அஜீத் . மருத்துவர்கள் கூடிய சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

கவுதன் மேனன், அஜீத் நடிக்கவிருக்கும் படத்தின் முழு திரைக்கதையையும் அஜீத்திடம் காண்பித்து ஒப்புதல் பெற்றுவிட்டாராம். இந்த படத்தை ஏ.எம். ரத்னம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார்,. பெரும்பாலான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கவிருப்பதால் பட்ஜெட் எகிறும் என கூறப்படுகிறது.

Leave a Reply