shadow

அஜித்தின் அடுத்த படம் அரசியல் பேசுமா?

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும், கருணாநிதி இல்லாத அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வருகிறேன் என்று கமல், ரஜினி உள்பட பல திடீர் அரசியல் தலைவர்கள் உருவாகி வரும் நிலையில் அஜித்தும் விரைவில் அரசியல் பேசவுள்ளார்.

ஆம் அவருடைய அடுத்த படம் பக்கா அரசியல் படம் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அறம் இயக்குனர் கோபி வசனம் எழுதவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘விசுவாசம்’ படத்திற்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் ‘அறம்’ கோபியின் வசனத்தில் தீப்பொறி வசனத்துடன் அஜித்தின் நடிப்பும் இணைவதால் இந்த படம் ஒரு மாஸ் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *