அஜித்தின் அடுத்த படம் ‘தீனா 2’? தயார் நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ்

அஜித்தின் அடுத்த படம் ‘தீனா 2’? தயார் நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ்

dheena2அஜித், லைலா நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தீனா’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமான இந்த படம் வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் அஜித்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் முயற்சி செய்தபோதிலும் அது நிறைவேறாமல் போனது.

இந்நிலையில் அஜித் நடிக்கவுள்ள ‘அஜித் 58’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாகவும், இதற்கு அஜித்தும் பாசிட்டிவ் பதில் கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் ‘தீனா’ படத்திற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜாவும் இந்த படத்தில் இணையவுள்ளதால் இந்த படம் ‘தீனா 2’ படமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அஜித் 57’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இருவரும் தங்களுடைய தற்போதைய படங்களை முடித்துவிட்டு ‘தீனா 2’ படத்துக்காக இணையவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply