அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா பெயரில் போலி அறிவிப்பு: திடுக்கிடும் தகவல்

அஜித் நடித்து வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. படக்குழுவினர்களும் நாயகி குறித்து அதிகாரபூர்வமான தகவலை இன்னும் வெளியிடவில்லை

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி யாமி கவுதம் தான் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இதனை அடுத்து ஒரு ட்விட்டர் பயனாளி அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் பெயரில் ஒரு போலி டுவிட்டர் பக்கம் உருவாக்கி அதில் யாமி கவுதம் தான் படத்தின் நாயகி என அதிகாரபூர்வமாக அறிவிப்பது போல் ஒரு போலி அறிவிப்பை அறிவித்துள்ளார்

ஏற்கனவே அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டில் வனத்துறையினர் ரெய்டு செய்ததாக ஒரு வதந்தி பரவி வரும் நிலையில் தற்போது யாமி கவுதம் தான் நாயகி என அவருடைய போலி பக்கத்தில்ல் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இதுதான் சுரேஷ் சந்திராவின் போலி டுவிட்டர் பக்கம்

//twitter.com/SureshChardraa/status/1207218587686932480?s=19

Leave a Reply