அஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்த பிரபல நடிகையின் அம்மா:

உண்மை தகவலா?

தல அஜித் ஒரு நடிகையை காதலித்து அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ள விரும்பி அவருடைய அம்மாவிடம் பெண் கேட்டதாகவும் ஆனால் அந்த நடிகையின் அம்மா அஜித்துக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டதாகவும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தி வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமர்க்களம் படப்பிடிப்பின்போது அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரிந்ததே. ஆனால் அதற்கு முன்னரே அஜித், நடிகை சுவாதி காதலித்ததாக கூறப்படுகிறது. நடிகை சுவாதி அஜித்துடன் வான்மதி, உன்னை தேடி ஆகிய படங்களில் நடித்தவர்

சுவாதியை அஜித்துக்கு அடித்து பிடித்து விட்டதால் அவருடைய அம்மாவிடம் சென்று பெண் கேட்டதாகவும், ஆனால் அவரோ தன்னுடைய மகள் மிகப் பெரிய நடிகையாக்க வேண்டும் என்பதால் இப்போதைக்கு திருமணம் செய்து வைக்க நேரமில்லை என்று கூறியதாகவும் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் செய்தியை வெளியிட்டுள்ளார்

ஆனால் இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் இதே பத்திரிகையாளர் கூறிய பல செய்திகள் அடுத்த சில நாட்களில் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் அதேபோல் அஜித் குறித்த செய்தியும் வதந்தியாகத்தான் இருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply